For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென வந்த ஃபோன் கால்... திருமணத்தையே நிறுத்திய மணமகன்... நடந்தது என்ன?

திடீரென வந்த போன் காலால் மணமகன் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:05 AM May 15, 2025 IST | Web Editor
திடீரென வந்த போன் காலால் மணமகன் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வந்த ஃபோன் கால்    திருமணத்தையே நிறுத்திய மணமகன்    நடந்தது என்ன
Advertisement

பொதுவாக திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. இதற்காகவே அதிக அளவு செலவு செய்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்துகின்றனர். இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் சில சமயங்களில் நின்றுவிடுவதும் உண்டு. சமீபத்தில் டிஜே பிளே செய்த பாடலால் முன்னாள் காதலியின் நினைவு வந்து மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதுபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் நடந்துள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : பொள்ளாச்சி வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ராஜஸ்தானின் கரௌலியில் பிரமாண்டமாக திருமண ஏற்பாடு நடந்துக்கொண்டிருந்தது. மணமகன் - மணமகள் இருவரும் ஓரளவு திருமண சடங்குகளை நிறைவு செய்துவிட்டனர். அவர்கள் இருவரும் அக்னியை வலம் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது மணமகனுக்கு தொடர்ச்சியதாக போன் வந்துக்கொண்டிருந்தது. அக்னியை 6வது முறையாக வலம்வந்தபோது மணமகன் அந்த போனை எடுத்து பேசினார். அதில் ஒரு பெண் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மணமகன் 7வது முறை அக்னியை வலம்வர மறுத்துவிட்டார். திருமணம் பாதியில் நின்றதையடுத்து மணமகளின் குடும்பத்தினர் கடும்கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்படாமல் தடுத்தனர்.

பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின் போது திருமணத்தை செய்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து மணமகள் குடும்பத்தினர் தாங்கள் செலவு செய்த ரூ.56 லட்சத்தை திருப்பி தருமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் கேட்டனர். இந்தத் தொகையை மணமகளின் குடும்பத்தினருக்கு வழங்குவதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும், மணமகனுக்கு போன் செய்தவர் யார், அதில் அவர் என்ன கூறினார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

Tags :
Advertisement