For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22,000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்!

09:29 PM Dec 20, 2023 IST | Web Editor
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22 000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்
Advertisement

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 22,000 கிலோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதையும் படியுங்கள்: யாருக்கெல்லாம் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது?

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 8 ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.  2-வது நாளாக  மதுரை விமான நிலையத்திலிருந்து 12,264 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள், குடிநீர் மற்றும் மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

காலை 6 மணி முதல் மதியம் 1.40 மணிவரை ஹெலிகாப்டர்கள் மூலம் 16 முறை நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது .  முதல் நாளான நேற்று 9 முறை ஹெலிகாப்டர்களில் சுமார் 9600 கிலோ எடையில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டத்திற்கு இதுவரை சுமார் 21,864 கிலோ எடையில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement