For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நிகழ்ந்த மோதலில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
03:27 PM Nov 25, 2025 IST | Web Editor
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நிகழ்ந்த மோதலில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Advertisement

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள பன்னு மாவட்டத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திங்களன்று பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடைக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நிகழ்தது. இம்மோதலில் டிடிபி அமைப்பை சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

பாகிஸ்தான் தாலிபான் என்று பொதுவாக அழைக்கப்படும் தெஹ்ரிக் -இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பானது, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே டிடிபி அமைப்பு நேற்று பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில்  மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

Tags :
Advertisement