For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி , பெரம்பலூரில் அருண் நேரு போட்டி!

10:44 AM Mar 20, 2024 IST | Web Editor
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு   தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி   பெரம்பலூரில் அருண் நேரு போட்டி
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் முறையே திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும்,  சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும்,  மதிமுகவிற்கு ஒரு தொகுதியும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.  மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளிலும் யார், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில்,  திமுக வேட்பாளர் பட்டியலை இன்று   காலை  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் :

1) வடசென்னை - கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை - தமிழ்ச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

6) வேலூர் - கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி - அ.மணி

8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் - டி.எம்.செல்வகணபதி

10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்

11 ) நீலகிரி (தனி) - ஆ ராசா

12 ) பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

13 ) கோவை - கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி

15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி ஆர் பாலு

18 ) பெரம்பலூர் - அருண் நேரு

19 ) தேனி - தங்கச் தமிழ் செல்வன்

20 ) ஈரோடு - பிரகாஷ்

21 ) ஆரணி - தரணி வேந்தன்

வேட்பாளர்கள் விவரம் :

  • 50%க்கு மேல் புதியவர்கள் (11)
  • பெண்கள் - 3
  • அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் - 2
  • ⁠முனைவர்கள் - 2
  • மருத்துவர்கள் - 2
  • ⁠பட்டதாரிகள் - 19
  • ⁠வழக்கறிஞர்கள் - 6
Tags :
Advertisement