For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுக, அதிமுக கட்சிகளை வைத்தே 2026-ம் ஆண்டு தேர்தல்" - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு!

07:31 AM Dec 08, 2024 IST | Web Editor
 திமுக  அதிமுக கட்சிகளை வைத்தே 2026 ம் ஆண்டு தேர்தல்     கார்த்தி சிதம்பரம் எம் பி  பேச்சு
Advertisement

தமிழகத்தில் முதலில் திமுக, இரண்டாவதாக அதிமுக இந்த இரு கட்சிகளை வைத்துதான் நிகழ்கால அரசியல் நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் முன்னாள் படைவீரர் அலுவலகம் சார்பில் நேற்று (டிச. 7) கொடிநாள் மற்றும் ராணுவ வீரர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ராணுவ வீரர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், தவெக தலைவர் விஜய் பேசியதை பெரிதாக கவனித்துக்கொள்ளவில்லை என்றும், தமிழகத்தில் முதலில் திமுக, இரண்டாவதாக அதிமுக இந்த இரு கட்சிகளை வைத்துதான் நிகழ்கால அரசியல் நடக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் 2026-ம் ஆண்டு தேர்தல் திமுக, அதிமுக கட்சிகளை வைத்தே நடைபெறும் எனவும், இந்தியா கூட்டணியும், திமுக கூட்டணியும் வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் பதவிக்கு வர முடியும் எனவும், சரித்திரம் புரியாதவர்கள் தான் மன்னராட்சி இருக்கிறது என்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், வேங்கை வயலையும், மணிப்பூரையும் ஒப்பிடுபவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்களாக இருப்பார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.

Tags :
Advertisement