For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலூர் அருகே நடைபெற்ற ரயில் விபத்து வழக்கு! ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து!

09:59 PM Jan 06, 2024 IST | Web Editor
வேலூர் அருகே நடைபெற்ற ரயில் விபத்து வழக்கு  ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து
Advertisement

2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி இரவு 9.30 மணியளவில், மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகில், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் மீது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 12 பேர் இறந்தனர். 71 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விதிகளை மதிக்காமல், அஜாக்கிரதையாக நண்பருடன் மொபைலில் பேசிக் கொண்டே ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சென்ற ரயில் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், ரயில் இயக்கும் போது ராஜ்குமார் தனது நண்பருடன் கைபேசியில் பேசி கொண்டு இருந்தார் என்பதையும், அஜாக்கிரதையாக அதிவேகத்தில் ரயிலை இயக்கினார் என்பதையும், சிக்னல்களை மீறினார் என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது. ராஜ்குமாருக்கு எதிரான எந்த ஆதாரங்களும் நிரூபிக்கபடவில்லை என்பதால் அவருக்கு விதித்த 10ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Tags :
Advertisement