தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கரையோர பகுதிகளான
சேதுக்குவாய்த்தான், நெடுங்கரை, சுகந்தலை, மறந்ததலை, வெள்ளக்கோயில்,
மேலாத்தூர், கீரனூர், ஆவரையூர் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை, நேரடியாகவும், ஊடு பயிராககவும் பயிரப்பட்டுள்ளது.
புவி சார் குறியீடு பெற்ற இந்த ஆத்தூர் வெற்றிலைக்கு தனி சிறப்பு உண்டு. மற்ற வெற்றிலையை விட அதிக நாட்கள் தன்மை மாறாமல் இருக்கும். இதனால் இந்த வெற்றிலைகள் வெளிமாநிலம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..
இந்த நிலையில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் கரைபகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரப்பட்ட வெற்றிலை பயிர்கள் நாசமாகியது. ஒரு ஏக்கருக்கு ரூ. 10 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கண்ணீர் மழ்க தெரிவித்தனர்.
மீண்டும் விவசாயம் செய்வதற்கு வெற்றிலை விதைகள் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் புவிசார் குறியீடு பெற்ற இந்த ஆத்தூர் வெற்றிலை விவசாயத்தை மீட்க தமிழ்நாடு அரசு முழுமையாக ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கியும், வெற்றிலை விதைகள் கொடுத்தும், வங்கி கடன் உதவி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.