அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு... மத்திய அரசின் புதிய அறிவிப்பு - காரணம் என்ன?
புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட (milled rice) சில அரிசி வகைகளுக்கு20% ஏற்றுமதி வரி...
12:18 PM May 01, 2025 IST | Web Editor
Advertisement
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகை புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட (milled rice) சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, பெறாத புழுங்கல் அரிசி என இரண்டிற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்தவும், தேவைக்கேற்ப போதுமான இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. உலகளவில் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்துவரும் நாடாக இந்தியா உள்ள நிலையில், பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.