திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!
திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்து ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பறவைகள்
வேட்டையாடுவதை தடுப்பதற்க்காக பணிகள் மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர்
ஸ்ரீகாந்த்யின் உத்தரவின்படி முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனியின் தலைமையில் வனத்துறையினர் பறவை வேட்டையாடுதலை கட்டுப்படுத்த தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தம்பிக்கோட்டை பத்தான்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து
பணியில் ஈடுபட்டபோது வலை வைத்து பறவைகளை வேட்டையாடிய பத்தான்காடு பகுதியைச்
சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இருவரை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். இருவருக்கும் தலா 25,000 வீதம் ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் :MaharashtraElections | இளைஞர்களுக்கு ரூ.4,000.. பெண்களுக்கு ரூ.3,000.. - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதிகள்!
மேலும் அவர்களிடமிருந்து மடையான் பறவைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வலைகளை
வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக ரோந்து
பணிகளை மேற்கொண்டு வருவதாலும் பறவைகள் வேட்டையாடுபவர்களை கண்டுபிடித்தால்
கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என வனச்சரக அலுவலர் ஜனனி தெரிவித்துள்ளார்.