சத்தீஸ்கரில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை..!
சத்தீஸ்கரில் பாதுகாப்புபடியிருடனான மோதலில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
07:47 PM Sep 22, 2025 IST | Web Editor
Advertisement
மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு நக்சலைட்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த நக்சலைட்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த மோதலில் எந்த பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. தாக்குதலின் பிறகு பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலிருந்து நக்சலைட்களின் ஏகே-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த ஆண்டு, சத்தீஸ்கரில் மட்டும் 247 நக்சலைட்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.