For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவு!

பீகாரில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
09:18 PM Nov 06, 2025 IST | Web Editor
பீகாரில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64 66  வாக்குகள் பதிவு
Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 121 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி, பீகாரில் 27.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மதியம் 1 மணி நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பீகார் சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77%  வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், பீகாரில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே அதிகமாக பதிவான வாக்கு சதவீதம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும 11ம் தேதியும், 14ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

Tags :
Advertisement