+2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. 90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தார் போல் இரண்டாம் இடத்தை ஈரோடும், சிவகங்கையும் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 97.42% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
இதே போன்று 97.25% தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் தேர்ச்சி விகிதம்
- திருப்பூர் - 97.45%
- ஈரோடு - 97.42%
- சிவகங்கை - 97.42%
- அரியலூர் - 97.25%
- கோயம்புத்தூர் - 96.97%
- விருதுநகர் - 96.64%
- பெரம்பலூர் - 96.44%
- திருநெல்வேலி - 96.44%
- தூத்துக்குடி - 96.39%
- நாமக்கல் - 96.10%
- தென்காசி - 96.07%
- கரூர் - 95.90%
- திருச்சி - 95.74%
- கன்னியாகுமரி - 95.72%
- திண்டுக்கல் - 95.40%
- மதுரை - 95.19%
- ராமநாதபுரம் - 94.89%
- செங்கல்பட்டு - 94.71%
- தேனி - 94.65%
- சேலம் - 94.60%
- சென்னை - 94.48%
- கடலூர் - 94.36%
- நீலகிரி - 94.27%
- புதுக்கோட்டை - 93.79%
- தருமபுரி - 93.55%
- தஞ்சாவூர் - 93.46%
- விழுப்புரம் - 93.17%
- திருவாரூர் - 93.08%
- கள்ளக்குறிச்சி - 92.91%
- வேலூர் - 92.53%
- மயிலாடுதுறை - 92.38%
- திருப்பத்தூர் - 92.34%
- ராணிப்பேட்டை - 92.28%
- காஞ்சிபுரம் - 92.28%
- கிருஷ்ணகிரி - 91.87%
- திருவள்ளூர் - 91.32%
- நாகப்பட்டினம் - 91.19%
- திருவண்ணாமலை - 90.47%
மொத்தம் - 94.56%
புதுச்சேரி
93.38%
காரைக்கால்
87.03%