குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!
குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
03:13 PM Aug 24, 2025 IST | Web Editor
Advertisement
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.
Advertisement
இதையடுத்து 15 பாகிஸ்தான் மீனவர்களை படகுடன் சேர்த்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான மீனவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.தொடர்ந்து அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.