For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு!

06:36 PM Feb 03, 2024 IST | Web Editor
பழனியில் 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
Advertisement

பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஆயிர வைசியரின் செப்பேட்டில் திருமஞ்சன பண்டாரங்கள் மூலவருக்கு பூஜை செய்ததாக தகவல் இடம் பெற்றுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டினை திருமஞ்சன பண்டாரம் சண்முகம் என்பவர் பாதுகாத்து வந்தார். இதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்.

“இச்செப்பேடு ஆயிர வைசியர் சமூகம் தம் குடிகளின் கெதி மோட்சத்திற்காக உருவாக்கப்பட்டது. இது 3 கிலோ எடையும், 49 செமீ உயரமும், 30 செமீ அகலமும் கொண்டதாக உள்ளது. இச்செப்பேடு பழநி மலை முருகனுக்கு திருமஞ்சனம், வில் வார்ச்சனை, தினசரி விளா பூஜை செய்ய வேண்டி பழனியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த திருமஞ்சன கட்டளையை விரிவாக கூறுகிறது.

இச்செப்பேடு கிபி 14-ம் நூற்றாண்டில் (1363-ம் ஆண்டு) சோப கிருது ஆண்டு தை மாதம் 25-ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது. பழனி ஸ்தானீகம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக்கவுண்டன் ஆகியோரை சாட்சியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்ப மிட்டுள்ளனர்.

செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர். பெரியநாயகி அம்மன். முருகன். செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவமாக வரை யப்பட்டுள்ளன. தொடர்ந்து முருகனின் புகழ் 5 பாடல்களில் பாடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement