For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate | "நவ.29-ல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்!

04:44 PM Nov 25, 2024 IST | Web Editor
 weatherupdate    நவ 29 ல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்
Advertisement

நவ.29ம் தேதி சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (நவ.24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (நவ. 25) காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் இன்று (நவ.25) முதல் நாளை மறுநாள் (நவ.27) வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நவ.29ம் தேதி சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

"தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நவ.29ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement