For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பையா ரீ-ரிலீஸ் - வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா!

09:29 PM Apr 11, 2024 IST | Web Editor
பையா ரீ ரிலீஸ்   வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா
Advertisement

 2010ஆம் ஆண்டு வெளியான பையா படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Advertisement

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பையா’. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது. ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். பிருந்தாசாரதி வசனம் எழுதியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதையும் படியுங்கள் : “நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!” – சீமான் பேச்சு!

இந்த திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது. எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி, வெற்றி பெற்ற படம், வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பிறகு வரவேற்பு பெற்ற படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்களை கிறங்கடித்த ‘பையா’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரீலீஸ் ஆகியுள்ளது.

‘பையா’ திரைப்படம் ரீ ரீலீஸ் ஆகியுள்ளதை அடுத்து இயக்குநர் லிங்குசாமி நடிகை தமன்னாவை நேரில் சந்தித்து பையா திரைபடத்தின் ரீ ரீலீஸ் பற்றியும், படபிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். இதையடுத்து ‘பையா' திரைப்படம் ரீரிலீஸை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா தங்களின் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக, நடிகை தமன்னாவுக்கு இந்த படம் தான் தமிழ் சினிமாவில் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

Tags :
Advertisement