For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் 2 மாதங்களில் இடிந்த பாலங்களின் எண்ணிக்கை தெரியுமா?

09:52 AM Aug 09, 2024 IST | Web Editor
பீகாரில் 2 மாதங்களில் இடிந்த பாலங்களின் எண்ணிக்கை தெரியுமா
Advertisement

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் நேற்று பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இது கடந்த இரண்டு மாதங்களில் 14வது பாலம் ஆகும். 

Advertisement

பீகார் மாநிலம் கதிஹாரில், கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.  ஊரகப் பணித் துறையால் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் பாக்கியா-சுகே பஞ்சாயத்தை மாவட்டத் தலைமை நகரத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பாலத்தின் இரண்டு தூண்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட நீதிபதி மனேஷ் குமார் மீனா கூறியதாவது;

“கட்டுமானத்தில் உள்ள பாலத்தின் பணிகள் சமீபத்தில் துவங்கியது. ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் பாலத்தின் இரண்டு தூண்கள் இடிந்து விழுந்துள்ளன. இதன் கட்டுமானப் பணிக்குழு சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

கதிஹார் மாவட்ட பொறுப்பாளர் நீரஜ் குமார் சிங் தெரிவித்ததாவது;

“சமீபத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பாலத்தின் இரண்டு தூண்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பணியில் இருக்கும் அல்லது முழுமையாக கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தால் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது” எனக் கூறினார்.

இந்த சம்பவத்துடன் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீகாரில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பாரண், சிவன், சரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் பாலங்கள் இடிந்து விழுந்தன.

Tags :
Advertisement