Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 12 வயது மாணவர்: 3 பேர் காயம்!

05:05 PM Apr 02, 2024 IST | Web Editor
Advertisement

பின்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 வயது மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 பேர் காயமடைந்துள்ளனர்.  

Advertisement

பின்லாந்தில் உள்ள சுமார் 800 பேர் படித்து வரும் ஒரு உயர்நிலை பள்ளியில்  இன்று காலை 9 மணியளவில் 12 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த பள்ளியை சுற்றி வளைத்தனர்.  மேலும்,  தாக்குதல் நடத்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.

12 வயது மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரும், காயமடைந்தவர்களும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ArrestFinlandgun shotgunfirePoliceSchoolstudents
Advertisement
Next Article