சுயேட்சையாக வெற்றிப் பெற்று காங்கிரஸில் இணைந்த விஷால் பட்டீல்!
மராட்டிய மாநிலம் சங்லி மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் பட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் சங்லி மக்களவை தொகுதியில் விஷால் பட்டீல் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி வசந்த்தாதா பட்டீலின் பேரன் ஆவார். சங்லி தொகுதியில் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா அணி வேட்பாளர் சந்திரஹர் சுபாஷ் பட்டீல், பாஜக வேட்பாளர் சஞ்சய் பட்டீல் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
People of Maharashtra defeated the politics of treachery, arrogance and division.
It is a fitting tribute to our inspiring stalwarts like Chhatrapati Shivaji Maharaj, Mahatma Jyotiba Phule and Babasaheb Dr Ambedkar who fought for social justice, equality and freedom.… pic.twitter.com/lOn3uYZIFk
— Mallikarjun Kharge (@kharge) June 6, 2024
காங்கிரஸ்காரரான விஷால் படேலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் சங்லி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் முடிவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஷால் பட்டீல் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில், “சங்லி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷால் பட்டீலை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.