For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கணவனின் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் பராமரிப்பு தொகையா? - இணையத்தில் வைரலாகும் நீதிபதியின் கேள்வி!

08:00 PM Sep 01, 2024 IST | Web Editor
கணவனின் ரூ 12 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் பராமரிப்பு தொகையா    இணையத்தில் வைரலாகும் நீதிபதியின் கேள்வி
Advertisement

12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர், குழந்தை பராமரிப்புக்காக 10,000 ரூபாய் எப்படி வழங்க முடியும் என்ற நீதிபதியின் கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு வழங்க வேண்டிய பராமரிப்புத் தொகை குறித்து நீதிபதி ஆச்சரியம் தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கு பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

மனைவி ஒருவர் தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த தொகைகுறித்தும் கேட்டுள்ளார். அப்போது, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்காத நிலையில், மகனுக்கு மட்டும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக்கேட்ட நீதிபதி கணவரின் வருமானம் குறித்தும் கேட்டார். அதற்கு மனைவியின் வழக்கறிஞர் கணவரின் சம்பளம் ரூ. 62,000 என்று கூறினார். ஆனால், கணவரின் வழக்கறிஞர் அவரது மொத்த சம்பளம் ரூ. 18,000 என்றும், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை ரூ. 12,000 மட்டுமே என்றும் விளக்கினார். இதற்கு,

“12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர், குழந்தை பராமரிப்பிற்கு 10,000 ரூபாய் எப்படி வழங்க முடியும்? அவர் எப்படி வாழ்வார்? அது முடியாது. நீதிமன்றம் எவ்வாறு இப்படி உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பினார். குழந்தை செலவுக்காக முக்கால்வாசி பணத்தையும் கொடுத்துவிட்டால், அந்த மனிதன் தனது வாழ்க்கைச் செலவுகளை எவ்வாறு நிர்வகிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும், எதிர்காலத்தில் கணவனின் ஊதியம் உயர்ந்தால் மனைவி தனியாக ஜீவனாம்சம் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். இந்த வீடியோவை கர்நாடக உயர்நீதிமன்றம் யூடியூப் சேனலில் பகிர்ந்தது. இதனையடுத்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. பயனர்கள் பலர் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் சிலவற்றை இங்கு காணலாம்.

ஒருவன் வேலையில் இருக்கும்போது இந்த தொகையை கொடுப்பான். இல்லாதபோது அவன் என்ன செய்வான்? இந்த காலக்கட்டத்தில் மனைவிகளும் சம்பாதிக்கும்போது கணவன் மட்டும் ஏன் பராமரிப்பு செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும்?

நியாயமற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது, பல வழக்குகளிலும் நீதிபதிகள் பலர் நியாயமாக தீர்ப்பளிக்கின்றனர். நான் திருமணம் செய்து கொள்ள விரும்பாததற்கு, இதுவே காரணம். எனது சம்பளத்தில் பாதியை என் மனைவிக்கு பராமரிப்பாகக் கொடுத்தால், என் குடும்பத்தை நான் எப்படிக் கவனிப்பேன்? இவ்வாறு பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

Tags :
Advertisement