Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆட்சி பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே 10 பிரச்னைகள்.. பதிலளிக்காமல் பிரதமர் மோடியை தப்பிக்க விடமாட்டோம்” - ராகுல் காந்தி!

05:03 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாள்களிலேயே 10 பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாட்களிலேயே 10 பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார். இந்த பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியை தப்பிக்க விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாள்கள்!

  1. பயங்கர ரயில் விபத்து
  2.  காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள்
  3.  ரயில்களில் பயணிகள் சந்திக்கும் அவல நிலை
  4. நீட் தேர்வு முறைகேடு
  5.  நீட் முதுநிலை தேர்வு ரத்து
  6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு
  7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, சுங்கக் கட்டணம் உயர்வு
  8.  காடுகளில் தீ
  9. தண்ணீர் பற்றாக்குறை
  10. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் வெப்ப அலை உயிரிழப்புகள்

நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.
அரசியல் சாசனத்தின் மீது மோடி மற்றும் அவரது அரசாங்கம் நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்வோம். மக்களின் குரலாக இருப்போம். பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
CongressNarendra modindaRahul gandhi
Advertisement
Next Article