சாலை விபத்தில் உயிரிழந்த 7 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்; புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு!
ஆந்திராவில், சாலை விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியைச் சார்ந்த 7 பெண்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பிராந்தியத்தை சார்ந்த 14 பேர் ஆந்திராவில் உள்ள தல்லாரேவு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணியை முடித்த பின்னர் மீண்டும் ஏனாம் நோக்கி ஆட்டோவில், வந்து கொண்டிருந்த போது, செகுசு பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அதில் பயணம் செய்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மருத்துவமனையில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மொத்தம் 7 பெண்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த ஏனாம் பிராந்தியத்தை சார்ந்த 7 பெண்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ள நிலையில் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி முனிசாமிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-ரூபி