For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்!

10:05 AM Jan 02, 2024 IST | Web Editor
மகா கவிதையை ஒருமுறை  இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும்   ப சிதம்பரம்
Advertisement

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட,  முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர். இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் காலத்தில் டெலஸ்கோப் கிடையாது, செயற்கைகோள் கிடையாது, விண்கலம் கிடையாது.  ஆயினும் தொல்காப்பியர் தான் அறிந்த உண்மைகளை சொன்னார்.  நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று,  ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள் கலந்தது தான் உலகம் என்று சொன்னார்.

இதையும் படியுங்கள்:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள்!

ஆறாவது பூதம் என்று ஒன்றும் கிடையாது.  இதைத்தான் தொல்காப்பியருக்கு பின்னர் வந்த புலவர்களும் கூறினார்கள்.   இவைதான் இன்றளவும் நம்பப்படுகிறது.  சராசரி இந்தியனின் வயது 70 ஆக உள்ளது.  குரங்கில் இருந்து  மனிதன் பிறந்தான் என்பது நமக்கு தெரிந்த பரிணாம வரலாறு.   ஆனால் இந்த மூன்று சொற்களில் மட்டும் பரிணாம வரலாறு அடங்கி விடாது என்கிறது மகா கவிதை.

450 கோடி ஆண்டுகளாக இந்த மண் உருண்டை சுழல்கிறது.  இந்த சுழற்சிதான் பரிணாமத்தின் தொடக்கம் என்கிறார் கவிஞர்.   கற்றல், கற்பித்தல்தான் மானுடத்தை இயக்கும் சக்தி,  அதை போலத்தான் தான் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைரமுத்து இருக்கிறார்.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான் சிறப்பை ஏன் வைத்தார்.  முதல் அதிகாரம் கிழிந்து விட்டால் மழையே கடவுளாகும்.  மகாகவிதை ஒருமுறை படித்தால் புரியாது.  ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

Tags :
Advertisement