For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘கொட்டுக்காளி’ டிரைலர் வெளியீடு எப்போது? வெளியான Update!

02:11 PM Aug 12, 2024 IST | Web Editor
‘கொட்டுக்காளி’ டிரைலர் வெளியீடு எப்போது  வெளியான update
Advertisement

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’  திரைப்படத்தின் டிரைலர் இந்த வார இறுதிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படம்  53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்றதுடன், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “தங்கலான்” ரிலீஸ் – ரூ.1 கோடி டிபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு நிபந்தனை!

சிறப்புத் திரையிடலில் 'கொட்டுக்காளி'  திரைப்படத்தை பார்த்த பல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர். முக்கியமாக, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ‘கொட்டுக்காளி ஒரு மாஸ்டர்பீஸ்’ எனப் புகழ்ந்துள்ளார். வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரை இந்த வார இறுதிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement