For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ஆபரேஷன் சிந்தூர்’ எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது” - பிரதமர் மோடி பெருமிதம்!

ஆபரேஷன் சிந்தூர் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என பிரதமர் மோடி பெருமையாக பேசியுள்ளார்.
04:53 PM May 13, 2025 IST | Web Editor
ஆபரேஷன் சிந்தூர் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என பிரதமர் மோடி பெருமையாக பேசியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது”   பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடி அதன் பின்பு அங்கு உரையாற்றினார்.

Advertisement

அவர் கூறியதாவது, “பாரத் மாதா கீ ஜெய் என்பது வெறும் பிரகடனம் அல்ல. இது பாரத தாயின் கெளரவம் மற்றும் கண்ணியத்திற்காக தனது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதம். நாட்டிற்காக வாழவும், சாதிக்கவும் விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கம் களத்திலும், இயக்கத்திலும் எதிரொலிக்கிறது.

இந்திய வீரர்கள் ஜெய் மா பாரதி என்று முழக்கமிடும்போது, எதிரிகளின் இதயங்கள் நடுங்குகின்றன. நமது ஆளில்லா விமானங்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் தங்கள் இலக்குகளை அடையும்போது, எதிரி  பாரத் மாதா கீ ஜெய் என்பதை கேட்கிறான். நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, வானத்திலிருந்து பாதாள உலகம் வரை அந்த முழக்கம்தான் எதிரொலிக்கிறது.

நீங்கள் அனைவரும் உண்மையிலேயே லட்சக்கணக்கான இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது. நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள். பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவைப் பார்த்தால் அவர்களுக்கு ஒரே ஒரு விதிதான்.  'அழிவு' என்பதை மட்டுமே சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

நமது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நினைத்து பாகிஸ்தான் தூக்கத்தை தொலைத்து விட்டது. பாகிஸ்தானின் ட்ரோன், அதன் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள்  என அனைத்தும் நமது திறமையான வான் பாதுகாப்பின் முன் வீழ்ந்துள்ளன. நாட்டின் அனைத்து விமான தளங்களின் தலைமைக்கும், இந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானபடை வீரருக்கும் நான் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உண்மையிலேயே அற்புதமான பணியை செய்துள்ளீர்கள்.

மாவீரர்களின் பாதங்கள் பூமியில் படும்போது, பூமி பாக்கியம் பெறுகிறது. ஒருவருக்கு ஹீரோக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுகிறது. அதனால்தான் நான் உங்களைப் பார்க்க அதிகாலையில் இங்கு வந்தேன். பல தலைமுறைகள் கடந்தாலும், இந்தியாவின் இந்த வீரம் பற்றி விவாதிக்கப்படும்போது, நீங்களும் உங்கள் தோழர்களும் அதன் மிக முக்கியமான அத்தியாயமாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு புதிய உத்வேகமாக மாறிவிட்டீர்கள்.

சாதாரண பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நீங்கள் அவர்களை (பாகிஸ்தானை) துல்லியமாக பலமாக தாக்கி இருக்கிறீர்கள். அதேவேளையில், நம் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். விமானப்படை, கடற்படை, ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்கள் ஈடு இணையற்ற வீரத்தின் காரணமாக,  ‘ஆபரேஷன் சிந்தூர்’ இப்போது எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement