'அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை' - வாடிக்கையாளர்கள் வேதனை !
தங்கம் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 280க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 4 உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ருபாய் குறைந்து ஒரு கிராம் 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ: 3000 குறைந்து 1 லட்சத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.