அண்ணா பிறந்த நாளையொட்டி, 27 கைதிகள் முதற்கட்டமாக விடுதலை!
115-வது பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, முதற்கட்டமாக 27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் திமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளன்று, அரசியலமைப்புச் சட்டம் 161 வது பிரிவின் கீழ் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட கைதிகள் என்ற சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுவித்து வருகிறது. அந்த வகையில், அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி 27 ஆயுள் தண்டனை கைதிகளை முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் 5,500க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு, மண்டல அளவில் மண்டல சிறைத்துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், தகுதியான கைதிகளின் பட்டியலை தயாரித்து விடுதலை செய்யப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் முதற்கட்டமாக 27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 27 கைதிகளில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.