#RainAlert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மாலை 5:30 மணயளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது தற்போது, சென்னைக்கு கிழக்கே, 480 கி.மீ., தொலைவிலும், ஒடிசாவின் கோபல்பூருக்கு தெற்கே, 590 கி.மீ., தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது கடலில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.