For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ரூ.401 கோடி வரி செலுத்த தேவையில்லை” ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு Zomato பதில்!

12:57 PM Dec 29, 2023 IST | Web Editor
“ரூ 401 கோடி வரி செலுத்த தேவையில்லை” ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு zomato பதில்
Advertisement

ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என புனே மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்திற்கு Zomato நிறுவனம் பதிலளித்துள்ளது.

Advertisement

மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 74(1)ன் கீழ் Zomato நிறுவனத்திற்கு  ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும், அதற்கான விளக்கத்தையும் கேட்டு மகாராஷ்டிர மாநில புனே மண்டல ஜிஎஸ்டி  புலனாய்வு இயக்குநரக பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தத் தொகை,  அக்டோபர் 29, 2019 முதல் மார்ச் 31, 2022 வரையிலான காலகட்டத்தில்  உணவக விநியோகஸ்த பார்ட்னர்கள்,  உணவு விநியோகஸ்திற்கு பொதுமக்களிடம்  வசூலித்த தொகைக்கான அபராதம் மற்றும் வட்டியை உள்ளடக்கியதாகும்.

இதுகுறித்து Zomato கூறியுள்ளதாவது;

ஒப்பந்த நிபந்தனைகளின் படி,  உணவு விநியோகிக்கும் நிறுவனங்களே மக்களுக்கு சேவைகளை வழங்குவதாகவும்,  சோமாட்டோ நிறுவனம் நேரடியாக சேவைகளை வழங்காததால் வரி கட்ட தேவையில்லை என வலுவாக நம்புவதாக Zomato கூறுகிறது. மேலும் இதற்கான பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் Zomato தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement