ரூ.138 கோடி லாபம் ஈட்டிய Zomato நிறுவனம்!
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமோட்டோ 2023 - 2024 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.138 லாபம் ஈட்டி அசத்தியுள்ளது.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அண்மை காலமாக பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்புடன் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் ஆர்டர் செய்து உண்ண முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உண்பது வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த வரவேற்பால் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இதனால் லாப நஷ்டத்தை அவ்வப்போது அந்நிறுவனங்கள் சந்திப்பதும் இயல்பாகிவிட்டது.
இந்நிலையில், சொமோட்டோ நிறுவனம் 2023 - 2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.138 கோடி லாபம் ஈட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2022 - 2023) இதே மூன்றாம் காலாண்டில் சொமோட்டோ நிறுவனம் ரூ. 347 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில்’, ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் ஒருங்கிணைந்த வருவாயை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் செயல்பாடுகளின் மூலம் முந்தைய ஆண்டு ₹1,948 கோடி வருமானமாக இருந்த நிலையில், ₹3,288 கோடியாக உயர்ந்துள்ளது, இது அந்நிறுவனங்களின் வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.