For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"Zomato Feeding India Concert (ZFIC) மீண்டும் வந்துவிட்டது!" - சோமேட்டோ சிஇஓ #DeepinderGoyal தகவல்!

01:08 PM Aug 23, 2024 IST | Web Editor
 zomato feeding india concert  zfic  மீண்டும் வந்துவிட்டது     சோமேட்டோ சிஇஓ  deepindergoyal தகவல்
Advertisement

Zomato Feeding India Concert (ZFIC) வருகிற நவம்பர் 30ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் அறிவித்தார்.

Advertisement

Zomato Feeding India Concert (ZFIC) வருகிற நவம்பர் 30ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் அறிவித்தார். இதில் தி கிராமி விருது பெற்ற பாடகி துவா லிபா கலந்துகொள்வார் என இந்த நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் ஆங்கில அல்பேனிய பாடகி துவா லிபா பல விருதுகளை பெற்றவர். இதில் பதினாறு பிரிட் விருதுகள் , பத்து கிராமி விருதுகள் மற்றும் ஏழு NME (New Musical Express)விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.  BRIT விருதுகளில் ஒரே ஆண்டில்  ஐந்து முறை பரிந்துரைகளைப் பெற்ற முதல் பெண் கலைஞர் ஆனார்.

இதையும் படியுங்கள் : மலேசிய பிரதமர் #AnwarIbrahim பாடிய ஹிந்தி பாடல் வீடியோ இணையத்தில் வைரல்!

இது தொடர்பாக தீபிந்தர் கோயல் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

"Zomato Feeding India Concert (ZFIC) மீண்டும் வந்துவிட்டது! இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியில் உலகளாவில் பல விருதுகள் பெற்ற பாடகி துவா லிபா கலந்துகொள்கிறார். இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் 30ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். Zomato-ல் பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்சியின் டிக்கெட்டுகளுக்கான விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், போஸ்ட் மலோன் நிகழ்த்திய Zomato இசை நிகழ்ச்சிக்கு, ​​டிக்கெட் விலை ₹ 2,999 முதல் ₹ 19,999 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement