54 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே... அபார வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான்!
232 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களிலேயே சுருண்டது. ஜிம்பாப்வே 54 ரன்களிலேயே ஆல் அவுட் ஆனதன் மூலம், ஆப்கானிஸ்தான் 232 ரன்கள் வித்தியாசத்தில் தனது அபார வெற்றியை பதிவு செய்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.