For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“#Account-ல் ஜீரோ பேலன்ஸ்” - நிதி நெருக்கடி குறித்து ‘96’ இயக்குநர் வேதனை!

02:19 PM Sep 13, 2024 IST | Web Editor
“ account ல் ஜீரோ பேலன்ஸ்”   நிதி நெருக்கடி குறித்து ‘96’ இயக்குநர் வேதனை
Advertisement

‘96’ திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் கடந்த வருடம் அவர் சந்தித்த பொருளாதார நிதி நெருக்கடி குறித்து பேசியுள்ளார்.

Advertisement

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன.

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.

படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகின. அதில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக பிரேம்குமார் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது;

தனியார் கல்லூரி ஒன்றில் பயிலரங்கத்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். நானும் கார் எடுத்துக் கொண்டு சென்றேன். எனது அக்கவுண்ட் (வங்கிக் கையிருப்பு ) பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது தெரியவில்லை. எனது தனிப்பட்ட மேலாளர் என்னை அழைத்து அப்போது தான் எச்சரித்திருந்தார்.

சரி, பரவாயில்லை என்று கிளம்பிவிட்டேன். அப்போது காரின் எரிபொருள் ரிசர்வ் நிலைமைக்கு வந்து விட்டது. எனக்கு என்னவென்றால் கல்லூரி போகும்போது நின்றுவிடக்கூடாது. வேறெங்காவது நின்றுவிட்டால் நன்றாகவிருக்கும். இல்லையென்றால் அசிங்கமாகிவிடும் என இருந்தது. அந்தக் கல்லூரியில் என்னை அழைத்ததுக்கு பயணச் செலவுக்காக சிறிது பணம் வைத்திருந்தார்கள்.

அதைப் பயன்படுத்தி அன்று எரிபொருளை நிரப்பினேன். அதற்கு அடுத்தநாள் நடிகர் கார்த்தியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அடுத்துதான் மெய்யழகன் படம் உருவானது.

Tags :
Advertisement