லக்னோ அணியின் ஆலோசகராக #ZaheerKhan நியமனம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.
அணியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
45 வயதாகும் ஜாகிர் கான் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், ஜாகிர் கான் இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.