Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கைது | 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

08:49 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட
தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-க்கு எதிராக,
சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் தனியாக
வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விசாரணைக்காக நேற்று
அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணைக்கு பின் அவரை
அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் முகமது சலீமை நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அமலாகத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதை
பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் துவங்கி அதில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்,
சட்டவிரோத பண பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றி
உள்ளதாகவும் தெரிவித்தார்.

சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளி சரண், விசாரணைக்கு ஆஜாராகி முழு
ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவரது கைது தேவையற்றது என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27ம் தேதி வரை
நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி
அமலாக்கத் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு
பதிலளிக்கும்படி முகமது சலீம் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை
தள்ளிவைத்துள்ளார்.

Tags :
ChennaiEDJaffer SadiqMohammad Salim
Advertisement
Next Article