Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? போதைப்பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்!

02:45 PM Mar 09, 2024 IST | Web Editor
Advertisement

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? அவர் எங்கெல்லாம் தலைமறைவாக சுற்றித்திருந்தார் என்பது குறித்து  தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக் கைது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் கெட்டமின் என்ற போதைப்பொருள் கடத்தலில் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. போதைப்பொருள் கடத்தலில். ஈடுபட்ட ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் டெல்லி அழைத்துவரப்பட்டார்.  போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு திரைப்படம்,  கட்டுமான தொழில்,  உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ததை ஜாபர் சாதிக் ஒப்புகொண்டார்.  மேலும் கடந்த 3 ஆண்டுகளில் 3000 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைபொருளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் போதை பொருள் கடத்தல் தொடர்பான நிதி முதலீடுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.  ஆஸ்திரேலியா,  மலோசியா,  நியூசிலாந்து நாடுகளின் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார்.  முன்னதாக திமுக பிரமுகராகவும் சில காலம் செயல்பட்டுள்ளார்.  தலைமறைவான பின்னர் திருவனந்தபுரம்,  ஐதராபாத்,  மும்பை,  ஜெய்பூர்,  டெல்லி என பல இடங்களில் தலைமறைவாக சுற்றி திரிந்துள்ளார்.

இவ்வாறு போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் கூறினார்.

Tags :
ஜாபர்சாதிக்ArrestDrugsJaffer SadiqNCBnews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article