வெளியேறிய யூசுப் பதான் - ஆபரேஷன் சிந்தூர் குழுவின் புதிய உறுப்பினரை அறிவித்த மம்தா பானர்ஜி!
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க, அனைத்து கட்சி எம்.பி.-களை உள்ளடக்கிய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில் ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்ளிட்ட 7 பேரின் தலைமையில் அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைப்பாளராக வழி நடத்தும் இக்குழுக்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 51 நாடாமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவில் 8 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட குழுவில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்பி யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இதுகுறித்து அவர் தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுத்து குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் யூசுப் பதானுக்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத்தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி புதிய குழு உறுப்பினரை அறிவித்துள்ளார். அதன்படி அபிஷேக் பானர்ஜி எம்.பி.-யை மம்தா பானர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.