Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு!

10:39 AM Sep 19, 2024 IST | Web Editor
Advertisement

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு அக்கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பேசியதாவது :

"கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள். லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எங்களது ஆட்சியில் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிப்பு!

இந்நிலையில், புனிதமான கோயில் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது சந்திரபாபு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Andhra Pradeshanimal fatChandrababu NaiduCHIEF MINISTERLattunews7TamilUpdatestirupati templeYSRcongress
Advertisement
Next Article