யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் - 5 பேர் கைது!
இது தொடர்பாக அவர் கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இன்று காலை 9.30 மணிக்கு, தூய்மை பணியாளர்கள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர்கள். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்” என்று கூறியிருந்தார்.
இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து,… pic.twitter.com/0nnem9KyQu
— Savukku Shankar (@SavukkuOfficial) March 24, 2025
இதையடுத்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.