For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதிய அம்சங்கள் அள்ளிக்கொடுத்த #YouTube... என்னென்ன தெரியுமா?

08:27 PM Oct 17, 2024 IST | Web Editor
புதிய அம்சங்கள் அள்ளிக்கொடுத்த  youtube    என்னென்ன தெரியுமா
Advertisement

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

Advertisement

யூடியூப் பெரும்பாலான மக்களின் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பல மணி நேரங்கள் யூடியூப்பில் வீடியோக்களை பார்ப்பதை பலர் இன்று வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் யூடியூப் இன்று மக்களோடு ஒன்றிணைந்து விட்டது.பலருக்கு பொழுதுபோக்காக அமையும் இந்த யூடியூப்பில் யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது பல்வேறு விதமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 3 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

மூன்று அம்சங்கள்:

  • யூடியூபில் ஒளிபரப்பாகும் வீடியோக்களின் வேகத்தை துல்லியமாக மாற்றலாம். முன்னதாக, வேகத்தை 0.25 புள்ளி வரை மட்டுமே குறைக்க முடியும். தற்போது அதை 0.05 புள்ளி வரை குறைக்கலாம். மேலும், அதன் வேகத்தை 2x வரை அதிகரிக்கவும் முடியும்.

"ஸ்லீப்பர் டைம்" வசதி. இது, 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கிறது. பயனர்கள் இந்த நேரத்தைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

செல்போனை குறுக்குவெட்டாக (portrait mode) பயன்படுத்தும்போது, முழுத் திரையில் இருந்தபடியே பிரவுஸிங் செய்ய முடியும். இது தற்போது ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் இனி ஆண்ட்ராய்டு சாதனங்களையும் இந்த வசதியை பெறலாம் என யூடியூப் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement