Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்" - பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் வெள்ளை உடையணிந்து பேரணி!

பீகார் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என இப்பேரணியில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
02:52 PM Apr 07, 2025 IST | Web Editor
பீகார் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என இப்பேரணியில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
Advertisement

பீகாரில் இந்த ஆண்டு கடைசியில் அம்மாநிலத்திற்கான ட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது இருந்தே அங்கு அரசியல் களம் தங்களது பிரசாரங்களை துவங்கிவிட்டன. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்,  புலம்பெயர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கான கட்டமைப்பை பீகாரிலேயே உருவாக்க வேண்டும்  என்கிற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளைச் சட்டையுடன் இளைஞர்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பெகுசராய் நகரின் மத்தியப் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்தப்பேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இப்பேரணியில் பாதுகாப்புப் படைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தும் பதாகைகளை  வைத்திருந்தனர்.

பீகார் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என இப்பேரணியில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து இன்று மாலை பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி சிறப்புயாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
நிதிஷ் குமார்இளைஞர் வேலைவாய்ப்புகாங்கிரஸ் கட்சிராகுல் காந்திபேரணிபீகார் அரசியல்பீகார் தேர்தல்புலம்பெயர்வுவேலைவாய்ப்பு கோரிக்கை
Advertisement
Next Article