For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளைஞர் கொலை வழக்கு! பிரபல கன்னட நடிகர் கைது!

03:43 PM Jun 11, 2024 IST | Web Editor
இளைஞர் கொலை வழக்கு  பிரபல கன்னட நடிகர் கைது
Advertisement

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா,  ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகா சுவாமி.  ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரியும் ரேணுகா சுவாமி,  தர்ஷன் தூகுதீபாவுக்கு நெருக்கமான ஒரு நடிகைக்கு,  சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை அனுப்பியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  ரேணுகா சுவாமி ஜூன் 8ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவரது உடல் ஜூன் 9ம் தேதி பெங்களூருவில் அமைந்துள்ள காமாக்ஷிபால்யாவில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து,  தெரு நாய்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலில் 4 வேட்பாளர்கள் ஒரே மாதிரியாக 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்களா? உண்மை என்ன?

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில்,  தர்ஷன் இன்று (ஜூன் 11ம் தேதி) காலை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக  கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  நடிகர் தர்ஷன் தூகுதீபா அனத்தாரு,  கிராந்திவீர சங்கோலி ராயண்ணா மற்றும் காட்டேரா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement