For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை அணியில் இளம் புயல் : இணைந்தார் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது சென்னை அணி...
03:54 PM Apr 18, 2025 IST | Web Editor
இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது சென்னை அணி...
சென்னை அணியில் இளம் புயல்   இணைந்தார் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்
Advertisement

2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக சென்னை அணி தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக பிரெவிஸ் அணியில் கொண்டு வரப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த சீசனில் சென்னை அணியில் இளம் வீரர்களே இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணி தொடக்க மற்றும் மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில் ஷேக் ரசீத், பிரெவிஸ் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை அணியின் மிடில் கொஞ்சம் பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

முன்னதாக மும்பை அணிக்காக 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் பிரெவிஸ் 230 ரன்களை 133.72 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானார்.

Tags :
Advertisement