Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்!

10:00 AM May 27, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 

Advertisement

இது தொடர்பாக ‘புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளை’  என்ற அரசு சாரா அமைப்பின்  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"புற்றுநோய்க்கு ஆலோசனை பெற்றவா்களில் 20 சதவீதம் போ் 40 வயதுக்குள்பட்டோா் ஆவா்.  அவா்களில் 60% போ் ஆண்கள்.  26% பேருக்கு தலை மற்றும் கழுத்தில் புற்றுநோயும், 16% பேருக்கு இரைப்பை புற்றுநோயும்,  15% பேருக்கு மாா்பக புற்றுநோயும்,  9% பேருக்கு ரத்த புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும்,  மும்பை,  டெல்லி,  ஹைதராபாத் மற்றும் மீரட் ஆகிய பகுதியிலிருந்து அதிகமானோா் எங்களை தொடர்பு கொண்டனர்.  கடந்த மாா்ச் 1 முதல் மே 15 வரை சுமார் 1,368 போ் எங்கள் அமைப்பை தொடா்புகொண்டுள்ளனர்.  புற்றுநோய் சிகிச்சை குறித்து இலவச ஆலோசனை பெற 93555 20202 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம்.  இந்த எண் மூலம் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை பெறலாம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
cancerIndia
Advertisement
Next Article