“கண்ணியமாக இருக்க வேண்டும்” - தவெக தலைவர் விஜய் அறிவுரை கூறும் வீடியோ இணையத்தில் வைரல்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் தொடர்பான கருத்துகளை அறிக்கையாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தனது கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அறிவுரை கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “ஹாய் பிரண்ட்ஸ் உங்களை Zoom-ல் மீட் செய்வதுதான் பிளான். ஆனால், இங்கு கொஞ்சம் நெட் ஒர்க் பிரச்னை இருப்பதால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது. அதனால்தான் இந்த ரெக்கார்ட் வீடியோ அனுப்புகிறேன். இதன் மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோஷம். நம்மளுடைய IT விங் தான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்று சொல்கிறார்கள்.
Exclusive @TVKVijayHQ Speech 📸 pic.twitter.com/xRjeec2stS
— TVK Vijay Trends (@TVKVijayTrends) April 19, 2025
இது நம்ம சொல்வதைவிட மற்றவர்கள் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். இனிமேல் நீங்கள் ரசிகர்கள் மட்டும் கிடையாது. என்னைப்பொறுத்தவரை நீங்கள் அனைவரும் நம் கட்சியின் Virtual Warriors. அப்படித்தான் நான் உங்களை அழைக்க ஆசைப்படுகிறேன். நம்மளுடைய தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிகவும் டீசண்டாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் கூறினார்.