For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் | நடிகர் சூர்யாவுக்கு கோரிக்கை வைத்த நடிகர் போஸ் வெங்கட்!

10:54 AM Oct 27, 2024 IST | Web Editor
நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்   நடிகர் சூர்யாவுக்கு கோரிக்கை வைத்த நடிகர் போஸ் வெங்கட்
Advertisement

நடிகர் சூர்யா விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என கங்குவா இசை வெளியீட்டில் நடிகர் போஸ் வெங்கட் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்ய நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் தற்போது நவம்பர் 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையெ கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான சார் என்ற படத்தை இயக்கிய இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட், மேடையில் பேசும்போது, யூடியூப்பில் தற்போது அரசியல் தான் அதிகம் பேசப்படுகிறது. அதனால் இந்த மேடையில் கொஞ்சம் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு நடிகர் தனது ரசிகர்களை வழிநடத்த வேண்டும். அதுவும் உங்களை போல் வழிநடத்த வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்களை பார்த்து கூறியுள்ளார்.

மேலும், தர்மம் செய்ய இப்போதே சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். உதவி மற்றும் மக்களின் பிரச்சனைகளை எப்படி கவனிக்க வேண்டும்எ என்பதை இப்போதே சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும், உங்களுக்கு அறிவையும், படிப்பையும் கொடுத்துவிட வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமானாரும் வரலாம். ஆனால் தலைவன் அவரது ரசிகர்களை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும்.

ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை கொடுக்க வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழ் திரையுலகில் கமல்சாருக்கு அப்புறம், இவ்வளவு நுனுக்கமான ஒரு நடிகரை பார்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறீர்கள். நிறைய நடித்து எங்களுக்கு திருப்திகரமான திரைப்படங்களை கொடுத்த பிறகு நீங்கள் கட்டாயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement