For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீ வேணா சண்டைக்கு வா” - மீண்டும் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்!... வாய்ப்பே இல்லை என ஓடிய #Trump!

11:35 AM Sep 13, 2024 IST | Web Editor
“நீ வேணா சண்டைக்கு வா”   மீண்டும் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்     வாய்ப்பே இல்லை என ஓடிய  trump
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கு எதிரான மற்றொரு ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, முடிவுகள் வெளியான பிறகு, 2025 முதல் யார் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். இம்முறை தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும்  கமலா ஹாரிஸ் இடையே போட்டி நிலவுகிறது.

கமலா ஹாரிஸ் அதிபரானால் இந்தியர்கள் அதிக பலன் பெறுவார்கள்  என்று நம்பப்படுகிறது.  டொனால்ட் டிரம்புடன் ஒப்பிடும்போது,  ​கமலா ஹாரிஸ் எப்போதும் அனைவரையும் அழைத்துச் செல்லும் குடியேற்றக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.

அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்தி கொள்வது என்பது வழக்கமானதாக உள்ளது. அதன்படி, கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் என்பது கடந்த 10ம் தேதி நடந்தது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தி முடித்துள்ளது.

இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் டிரம்ப்பும், கமலா ஹாரிஸும் சந்திக்கின்ற முதல் நேரடி விவாதம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில், சூடு பறக்க இருவரும் விவாதம் செய்தனர். இந்த விவாதம் தொடங்கும் முன், டிரம்ப் இருந்த இடத்திற்கு நேரடியாகவே சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்த நேரடி விவாதம் 90 நிமிடங்கள் நடந்தது. விவாதத்தின் தொடக்கத்தில், டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்குச் சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இது அனைவரின் மனம் கவரும் ஒன்றாக அமைந்தது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் போன்ற விஷயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

விவாதத்தின் பல இடங்களில் டிரம்பை மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார், இதனால் டிரம்ப் பல இடங்களில் தடுமாறிய பேசினார். இந்த விவாதத்தின் முடிவில் பல அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழக்கம் போல வெளியிட்டன. அதில், பெரும்பாலான பொலிட்டிகோ செய்தி நிறுவனம் , சி.என்.என். செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம், நியூயார்க் டைம்ஸ், பாக்ஸ் நியூஸ், ABC, MSNBC போன்ற பெரும்பாலான செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரியவந்துள்ளன.

மேலும், அனல் பறக்கும் இந்த 90 நிமிட விவாதத்தைக் கமலா ஹாரிஸ் நிதானமாக கை ஆண்டார் எனவும் டிரம்ப் இந்த விவாதத்தில் கோபமாகவே செயல்பட்டார் எனவும் பொதுவான கருத்தாக அனைத்து ஊடகமும் தெரிவித்துள்ளன.  மேலும் உடனடியாக கமலா ஹாரிஸ் 2வது விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தில் கமலா ஹாரிஷ் தான் வென்றதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

இத்தகைய சூழலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement