"நீயும் டிகிரி இல்லை, நானும் டிகிரி இல்லை" - மாமன்ற உறுப்பினர் பேச்சால் சலசலப்பு!
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மண்டல சேர்மன் மற்றும் மாமன்ற உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேலப்பாளயம் பகுதியில் உள்ள சாலை விவகாரத்தில் இரண்டு வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக மண்டல சேர்மன் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் பேச்சியம்மாள் கூட்டத்தில் பேசுகையில் சம்பந்தபட்ட வார்டு தனக்கு தான் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு அரசு அனைத்து அறிவிப்புகளையும் அரசாணைகளிலும் தமிழில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியிலும் அனைத்து அறிவிப்புகள் மற்றும் அரசாணைகளையும் தமிழில் தான் வெளியிட வேண்டும் என்றார். தொடர்ந்து பேசியவர், நீயும் டிகிரி இல்லை நானும் டிகிரி இல்லை என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் எனக்கு ஆங்கிலம் தெரியாது, அனைத்தையும் தமிழில் வெளியிட வேண்டும், பெண் கவுன்சிலர்கள் என்றால் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆண் கவுன்சிலர்கள் பைல் கொண்டு வந்தால் உடனடியாக பணிகள் நடக்கிறது.
அறிக்கைகளை ஆங்கிலத்தில் வைத்தால் என்ன செய்வது எப்படி படிப்பது. எங்கள் முதலமைச்சர் படிக்காதவர்களுக்கு கவுன்சிலர்களாக வரவைத்துள்ளார். பணிகள் எதும் நடக்கவில்லை எங்கள் பகுதி மக்கள் என்னை வார்டுக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது என சொல்வதாக பேசினார்.