சபரிமலையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2025-26 மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, 1800 தற்காலிகப் பணியிடங்களுக்குத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விண்ணப்பங்களைஅளித்துள்ளது. சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் தேவஸ்தானங்களில் தினக்கூலி அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் பணியிட விவரங்கள் தெரிவிக்கக்ப்பட்டுள்ளது, அந்த வகையில் தினசரி ரூ. 650 ஊதியத்துடன் தற்காலிகப் பணி. தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விண்ணப்பதாரர்கள், தேவஸ்வம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.travancoredevaswomboard.org இல் இருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மருத்துவச் சான்றிதழ் மற்றும் சுகாதார அட்டையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைமைப் பொறியாளர், திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம். மின்னஞ்சல் முகவரி: tdbsabdw@gmail.com
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2025, மாலை 5 மணி ஆகும். அய்யப்ப பக்தர்களுக்கும், பணி தேடுவோருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இணையதளத்தைப் பார்வையிடலாம்.