Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

03:03 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை முதுகலை (கலை, அறிவியல்)
படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 85,737 பேர் சேர்ந்துள்ளனர்.
85% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் நாட்கள் உள்ளதால் 100%
சேர்க்கை நடைபெறும். புதுப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி சேர்க்கையில் பெண்கள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள இடங்களுக்கு இறுதியாக தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதுகலை கலை, அறிவியல் படிப்பில் சேர வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 13 மற்றும் 14ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.

ஆகஸ்ட் 28ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும். சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை குறித்து துறை செயலாளர்கள் மற்றும் துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
EducationHigher Education MinisterMaster Degreesponmudistudents
Advertisement
Next Article